சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, தேசிய குவாண்டம் திட்டத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் தேசிய குவாண்டம் தொடர்பு மையமான IITM C-DOT சாம்ஞா டெக்னாலஜிஸ் அறக்கட்டளையைத் துவக்கியுள்ளது.
சென்னை பெருநகரப் பகுதி முழுவதும் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ இரயில் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புதிய கடனை அங்கீகரித்துள்ளது.
இந்தத் தொகையானது, 2022 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான ADB வங்கியின் 780 மில்லியன் டாலர் பல்பிரிவு நிதி வசதியின் ஒரு பகுதியாகும்.
இந்தியக் கடற்படையானது, கொச்சியில் முதன்முதலில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப் பட்ட DSC A20 எனப்படும் ஆழ்கடல் ஆய்வு உதவி கர கப்பலினை இயக்க உள்ளது.
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன் என்றும் அழைக்கப் படுகிறார்) நினைவாக ஒரு நினைவு தபால் தலையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
அவர் கி.பி 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் மத்தியப் பகுதிகளை ஆண்ட முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.