அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ஆனது கோனோரியாவுக்கு (மேக வேட்டைப் பாதிப்பு) நுசோல்வென்ஸ் (சோலிஃப்ளோடாசின்) மற்றும் புளூஜெபா (ஜெபோடிடாசின்) என்ற இரண்டு புதிய வாய்வழி மருந்துகளை அங்கீகரித்துள்ளது.
புது டெல்லியில் நடைபெற்ற முதல் கோ கோ உலக கோப்பை போட்டியைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், முதல் காமன்வெல்த் கோ கோ சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்த உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்த கவிதா சந்த், 4,892 மீட்டர் உயரமுள்ள அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரமான மவுண்ட் வின்சன் சிகரத்தை வெற்றிகரமாக ஏறினார்.
இந்திய அணியானது, சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹாங்காங்கை தோற்கடித்து WSF (உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு) ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வென்றது, இது ஸ்குவாஷ் போட்டியில் அதன் முதல் உலகக் கோப்பைப் பட்டத்தைக் குறிக்கிறது.
மூத்தப் பத்திரிகையாளர் சங்கீதா பரூவா பிஷாரோட்டி இந்தியப் பத்திரிகையாளர் மன்றத்தின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆபரேஷன் தண்டர் 2025 எனப்படும் வனவிலங்குகள் மற்றும் வனத்துறைக் குற்றங்களுக்கு எதிரான உலகளாவியச் சட்ட அமலாக்க நடவடிக்கையானது உலக சுங்க அமைப்பு (WCO) உடன் இணைந்து சர்வதேச காவல் துறையினால் (இன்டர்போல்) நடத்தப் பட்டது.
போண்டி கடற்கரைத் தீவிரவாதத் தாக்குதல் ஆனது, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில், ஹனுக்கா பை தி சீ கொண்டாட்டத்தின் போது நடைபெற்றது.
ஹனுக்கா (சானுக்கா) என்பது யூதர்களின் எட்டு நாள் குளிர்கால "விளக்குகளின் பண்டிகை" ஆகும்.
100 ஆண்டுகளுக்கு முன்பு M.K. காந்தி அவர்களால் பாராட்டப் பட்ட ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த பாண்டுரு காதி எனும் பருத்தித் துணிக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டது.
அபிக்யான் குண்டு (17), துபாயில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் மலேசிய அணிக்கு எதிரான போட்டியின் போது இளையோர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.