இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் 'The One: Cricket, My Life and More' என்ற தலைப்பிலான தனது சுயசரிதையைப் புது டெல்லியில் வெளியிட்டார்.
இந்தியாவானது செயலி உருவாக்கத் திட்டத்தின் (MDP) கீழ் மேம்படுத்தப் பட்ட கணினி மேம்பாட்டு மையத்தினால் (C-DAC) உருவாக்கப்பட்ட, அதன் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 1.0 GHz, 64-பிட் டூயல்-கோர் மைக்ரோ பிராசசரை (இரட்டை மையச் செயலி) அறிமுகப்படுத்தியுள்ளது.
சாய் ஜாதவ், டேஹ்ராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாடமியில் (IMA) பட்டம் பெற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய இராணுவ அகாடமி ஆனது 93 ஆண்டுகளாக ஆண் அதிகாரிகளுக்கு மட்டுமே பயிற்சி அளித்தது.
மத்தியப் பிரதேசத்தின் மியானா இரயில் நிலையம், 2025 ஆம் ஆண்டு தேசிய எரிசக்தி வளங்காப்பு விருதைப் பெற்றது மற்றும் எரிசக்தி திறன் வாரியத்தினால் (BEE) போக்குவரத்துப் பிரிவில் (இரயில் நிலையம்) சிறந்த செயல்திறன் கொண்ட பிரிவாக அங்கீகரிக்கப்பட்டது.
ஆற்றல் செயல்திறன் மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக 2025 ஆம் ஆண்டு தேசிய எரிசக்தி வளங்காப்பு விருதுகளின் 4 ஆம் பிரிவில் கோவா இரண்டாவது பரிசை வென்றது.
டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் நிறுவனமானது, அதன் ஆரிஜின் மருந்துச் சேவைகள் பிரிவு மூலம் நுசோல்வென்ஸை உற்பத்தி செய்து, தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் அதற்கான சந்தை அங்கீகாரத்தைப் பெற உள்ளது.
கோனோரியா தொற்றானது நீசீரியா கோனோரியா என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது என்பதோடுஇது அதிகரித்து வரும் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் திறன் காரணமாக உலக சுகாதார அமைப்பினால் "அதிக முன்னுரிமை" பிரிவில் வகைப்படுத்தப் பட்டுள்ளது.