TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 28 , 2025 5 days 49 0
  • குவைத் நாடானது, அதன் பொருளாதார பன்முகப்படுத்தல் உத்தியின் ஒரு பகுதியாக பிராந்திய மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் அதன் பங்கை அதிகரிக்கும் நோக்கில் பௌபியன் தீவில் முபாரக் அல்-கபீர் துறைமுகத்தை கட்டமைப்பதற்காக சீனாவுடன் 4.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், உலகளவில் பொருளாதாரத் தடைகளின் அதிகரித்து வரும் பயன்பாடு குறித்து "The Great Sanctions Hack" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • டெக் மஹிந்திரா குளோபல் செஸ் லீக் (TechM GCL) 2025 என்றும் அழைக்கப்படும் 3வது உலக சதுரங்கப் போட்டியில் (GCL 2025) ஆல்பைன் SG பைப்பர்ஸ் அணி வெற்றி பெற்று உள்ளது.
  • புது டெல்லி (டெல்லி) முழுவதும் 100 இடங்களில் ஒரு தட்டுக்கு 5 ரூபாய் என்ற மானிய விலையில் உணவு வழங்குவதற்காக என டெல்லி அரசு “அடல் உணவகத் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்