ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL), ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் உலகின் அதிகபட்ச மாற்றும் திறன் கொண்ட முதல் திரவ மாற்ற (LC-Max) அலகைத் தொடங்கியுள்ளது.
ஆதார் புதுப்பித்தல், அங்கீகாரம், அகல்நிலை (ஆஃப்லைன்) சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பான தரவுப் பகிர்வு ஆகியவற்றைப் பயனர்கள் புரிந்து கொள்ள உதவும் வகையில், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) 'உதய்' என்ற ஆதார் உருவச் சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய இரயில்வே துறை அமைச்சர் புது டெல்லியில் 100 இரயில்வே துறை அதிகாரிகளுக்கு 70வது அதி விசிஷ்ட இரயில் சேவா புரஸ்கார் 2025 விருதை வழங்கினார்.
இந்திய இரயில்வே துறையில் வழங்கப்படும் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான அதி விசிஷ்ட இரயில் சேவா புரஸ்கார் ஆனது புத்தாக்கம், செயல் பாட்டுத் திறன், பாதுகாப்பு, வருவாய் வளர்ச்சி, திட்ட நிறைவு, விளையாட்டு மற்றும் பிற சிறப்பான சேவைகளை உள்ளடக்கியது.