இராஜஸ்தானில் உள்ள பமன்வாஸ் கங்கர் பஞ்சாயத்து, முழுமையாக இயற்கை வேளாண்மை முறை கொண்ட பஞ்சாயத்து ஆக சான்றிதழ் பெற்ற மாநிலத்தின் முதல் கிராம அமைப்பாக மாறியுள்ளது.
NLC இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனமானது அதன் நிதி மேலாண்மை, செயல்பாட்டு திறன் மற்றும் மதிப்பு உருவாக்கத்திற்காக நிதிச் செயல்திறனுக்கான SKOCH தங்க விருதை வென்றது.
NLCIL என்பது நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நவரத்தினப் பிரிவு சார்ந்த மத்தியப் பொதுத்துறை நிறுவனமாகும் (CPSE).
அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கமலா நீர்மின் நிலையத்தினை பொது முதலீட்டு வாரியம் அங்கீகரித்துள்ளது.
1,720 மெகாவாட் நிறுவப்பட்ட திறனைக் கொண்டுள்ள இந்தத் திட்டம் 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் மற்றும் நிகர-சுழிய உமிழ்வை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.