TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 17 , 2026 5 days 32 0
  • தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்கும் கொண்டாடுவதற்குமான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா 2026 என்ற நிகழ்ச்சியினை தமிழக முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தார்.
  • டிசம்பர் 13 ஆம் தேதியன்று இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு குடிமகனைக் கொன்ற தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று சிரியாவில் ISIS மீது அமெரிக்க விமானம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
  • ஜனவரி 07 ஆம் தேதி நிலவரப்படி மாணவர்களுக்கு 50,60,941 அடையாள எண்களை உருவாக்கித் தானியங்கி நிரந்தரக் கல்விக் கணக்குப் பதிவேடு (APAAR) அமைப்பை செயல்படுத்துவதில் சத்தீஸ்கர் முதலிடத்தில் உள்ளது.
    • மாநிலம் முழுவதும் உள்ள 57,045 பள்ளிகளில் 57,10,207 மாணவர்களில் பதிவானது 88.63 சதவீத பரவலாகும்.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட மனிதனால் சுமந்து செல்லக் கூடிய வழி காட்டப்பட்ட பீரங்கி எதிர்ப்பு எறிகணையை (MPATGM) வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்தது.
    • MPATGM என்பது மூன்றாம் தலைமுறை நுட்பத்திலான ஒரு முறை ஏவப்பட்டு எந்த நடவடிக்கையும் தேவையற்ற எறிகணை ஆகும் என்பதோடு இது பகல் மற்றும் இரவு சூழல்களில் மேற்பரப்பிலிருந்து பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும்.
  • சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஒருநாள் சர்வதேச (ODI) பேட்ஸ்மேன் தர வரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.
    • இந்த இன்னிங்ஸின் மூலம், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு, ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்