TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 20 , 2026 14 hrs 0 min 34 0
  • தென் மாவட்டங்களில், டிராக் நெட் நடவடிக்கையின் போது, பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் (NBWs) நிலுவையில் இருந்த 598 நபர்களை தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்தனர்.
  • ஆர்மேனியாவில் நடைபெற்ற ஆண்ட்ரானிக் மார்கார்யன் நினைவுப் போட்டியில் 21 வயதான டெல்லியின் ஆர்யன் வர்ஷ்னி இந்தியாவின் 92வது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
  • மும்பை பங்குச் சந்தையானது (BSE) ஹாங்காங் தலைமைத்துவ விருதுகள் மற்றும் CMO ஆசியா விருதுகளில் 2026 ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த முதலாளித்துவ நிறுவன விருதைப் பெற்றது.
  • நீதிபதி ரேவதி மோஹிதே டெரே மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியானார்.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் பிரவீன் வஷிஸ்டாவை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தார்.
  • மத்திய உள்துறை அமைச்சர் புது டெல்லியின் பான்செரா பூங்காவில் 3வது சர்வதேச காற்றாடி (பட்டம் விடும்) விழா 2026 என்ற விழாவைத் தொடங்கி வைத்தார்.
  • சீனாவிற்கு அடுத்தபடியாக 400 மில்லியனுக்கும் அதிகமான 5G பயனர்களுடன் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய 5G சந்தாதாரர் தளமாக மாறியுள்ளது.
  • தொடர்ச்சியான அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிர்வாகக் கருத்தாய்வுகளைக் காரணம் காட்டி, மிசோரம் ஆளுநர் சக்மா தன்னாட்சி மாவட்ட சபை பகுதியில் (CADC) ஆளுநர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தார்.
    • ஜூலை 7, 2025 அன்று CADC சபையின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்களை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
  • ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், பண்டைய ஜப்பானிய சாமுராய் வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவில் சேர்க்கப்பட்ட முதல் இந்தியர் ஆனார்.
    • கென்ஜுட்சு என்பது ஒழுக்கம், துல்லியம், மன சமநிலை மற்றும் நெறிமுறை நடத்தை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பாரம்பரிய ஜப்பானிய தற்காப்புக் கலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்