TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 30 , 2026 17 hrs 0 min 9 0
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமானது ராஜஸ்தானில் உள்ள தனது 300 மெகாவாட் (MW) பார்சிங்கர் சூரிய மின்சக்தித் திட்டத்தை முழு அளவில் இயக்கத் தொடங்கியுள்ளது.
  • மைக்ரோசாப்ட் நிறுவனம் Maia 200 என்ற செயற்கை நுண்ணறிவு சில்லுவை அறிமுகப் படுத்தியது என்பதோடு மேலும் ஒரு டாலருக்கு 30% அதிக செயல்திறனை வழங்கும் இது மைக்ரோசாப்ட் 365 கோபைலட் மற்றும் கிளவுட் AI சேவைகளுக்காக அமெரிக்கத் தரவு மையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • வங்கதேசம் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் ஸ்காட்லாந்து அணி வங்கதேசத்திற்குப் பதிலாக இடம் பெற்றுள்ளது.
  • புவியியல், அறிவியல், ஆய்வுகள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் வகையில் ஜனவரி 27 அன்று தேசியப் புவியியல் தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்