TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 9 , 2026 15 days 69 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னையில் உள்ள எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன் முறையாக அமைக்கப் பட்டுள்ள ஜெர்மானிய தத்துவஞானியும் பொதுவுடைமைத் தலைவருமான கார்ல் மார்க்ஸின் சிலையைத் திறந்து வைத்தார்.
  • வ.உசிதம்பரனார் (VOC) துறைமுக ஆணையமானது, இந்தியாவில் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பை நிறுவிய முதல் துறைமுகமாக மாறியுள்ளது.
  • DRDO அமைப்பானது, ஒடிசா கடற்கரையில் அணுசக்தித் திறன் கொண்ட அக்னி-3 உந்துவிசை (ballistic) ஏவுகணையை (நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை) வெற்றிகரமாக பரிசோதித்தது.
  • ஜனவரி 30, 2026 நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 723.8 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது..
  • ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவானது ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை 2026-ஐ வென்றது.
  • புது டெல்லியில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், சாம்ராட் ராணா மற்றும் சுருச்சி சிங் ஆகியோர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  • ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம், "2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு" என்ற திட்டத்தின் கீழ் 100% காப்பீட்டுப் பாதுகாப்பை அடைந்த இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
  • இந்திய ரயில்வேயானது, இந்தியாவின் முதல் LNG-டீசல் இரட்டை எரிபொருள் DEMU (Diesel Electric Multiple Unit) ரயிலை அகமதாபாத்தில் உள்ள சபர்மதியில் அறிமுகப்படுத்தியது.
  • இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த இரண்டு வயது ஜூட் ஓவன்ஸ், ஸ்னூக்கர்  விளையாட்டில் பேங்க் ஷாட் மற்றும் டபுள்-பாட் ஷாட் ஆகியவற்றை அடித்த இளம் வீரர் என்ற இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தார்.
  • மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையால் (CISF) ஏற்பாடு செய்யப்பட்ட வந்தே மாதரம் கடலோர சைக்கிளோத்தான்-2026 ஆனது, "வந்தே மாதரம்" தேசியப் பாடலின் 150 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஆந்திரப் பிரதேசத்திற்குள் நுழைந்தது.
  • மேஜர் ஜெனரல் பிபின் பக்சி (ஓய்வு), ஏர் மார்ஷல் ராஜேஷ் குமார் (ஓய்வு), தூதர் அனில் த்ரிகுனாயத் மற்றும் பிரிகேடியர் அகிலேஷ் பார்கவா (ஓய்வு) ஆகியோரால் எழுதப்பட்ட ‘Red Lines Redrawn: Operation Sindoor and India’s New Normal’ என்ற புத்தகம், இந்தியாவின் சிந்துர் நடவடிக்கை பற்றி விரிவாகக் கூறுகிறது.
  • மேகாலயாவின் கிழக்கு ஜெயிந்தியா மலைப்பகுதியில் உள்ள ஒரு சட்ட விரோத எலித் துளை நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • சுமார் 4-5 அடி ஆழமுள்ள குறுகிய சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தி நிலக்கரியை வெட்டி எடுக்கும் எலித் துளை சுரங்க முறையை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்கள் காரணமாக 2014-ஆம் ஆண்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்