ஜலந்தரில் நடைபெற்ற குரு ரவிதாஸின் பிறந்தநாள் விழாவின் போது, பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமான நிலையமானது, குரு ரவிதாஸ் ஜி மகாராஜ் ஜி விமான நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஹரியானாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனையான தேவிகா சிஹாக், தாய்லாந்து மாஸ்டர்ஸ் 2026 போட்டியில் தனது முதல் பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு (BWF) சூப்பர் 300 பட்டத்தை வென்றார்.
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தலைமையிலான பங்கேற்புடன், இந்தியா முதல் முறையாக துபாயில் நடைபெற்ற Gulfood 2026 கண்காட்சியில் பங்காளர் நாடாகப் பங்கேற்றது.
GPT-4o மற்றும் அது தொடர்புடைய மாதிரிகள் பிப்ரவரி 13, 2026 அன்று நிறுத்தப்படும் என்றும், GPT-5.2 புதிய தொழில்முறை அடிப்படையாக மாறும் என்றும் OpenAI அறிவித்து உள்ளது.
இந்திய விமானப்படையின் பெச்சோரா தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்பானது, வான் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதற்காக முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
பெச்சோரா என்பது 1970-களில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஒரு ஏவுகணை அமைப்பாகும்.
ஹைதராபாத் பேராயர் கார்டினல் பூலா அந்தோணி, இந்திய கத்தோலிக்க பிஷப்ஸ் மாநாட்டின் (CBCI) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கிட்டத்தட்ட இரண்டு கோடி கத்தோலிக்கர்களை வழி நடத்தும் முதல் தலித் மதகுரு என்ற பெருமையை அவர் பெறுகிறார்.