TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 12 , 2026 13 hrs 0 min 34 0
  • புது தில்லியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு ஆசிய ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் மேகனா சஜ்ஜனார் தனிநபர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • விமான நிலையப போக்குவரத்தில் உமிழ்வைக் குறைக்க வேண்டி பயணிகள் போக்குவரத்திற்காக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பேருந்துகளை இயக்கும் இந்தியாவின் முதல் விமான நிலையமாக கேரளாவில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் (CIAL) மாறவுள்ளது.
  • சுற்றுலா, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக, சம்பாவத் மாவட்டத்தில் உள்ள தனக்பூரில் சாரதா நதி வழித்தடத் திட்டத்திற்கு உத்தரகண்ட் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • நாகாலாந்தின் கோஹிமாவிற்கு அருகிலுள்ள ருசோமா கிராமத்தில் தோட்டக்கலை பயிர்கள் வழியேயான கிராமப்புற மேம்பாடு மற்றும் ஆரஞ்சு சாகுபடியை ஊக்குவிக்கும் 5வது ருசோமா ஆரஞ்சு விழா தொடங்கியது.
    • இந்த விழா " Abundance of Rüsoma" என்ற கருத்துருவின் கீழ் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்