TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 14 , 2026 9 days 79 0
  • இந்தியாவில் சூப்பர்ஜெட்-100 (SJ-100) விமானங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
  • கண்புரை தொடர்பான பார்வையின்மையைக் குறைப்பதற்கான பங்களிப்புக்காக, புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த கண் மருத்துவர்கள் டாக்டர் ஹரிப்ரியா அரவிந்த் மற்றும் டாக்டர் ஆர். வெங்கடேஷ் ஆகியோர் சாங்-கிராண்டால் மனிதாபிமான விருது 2026 க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • 2026 பிப்ரவரி 10–13 வரை ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் நடைபெற்ற உலகின் மிகப் பெரிய கரிம வர்த்தக கண்காட்சியான BIOFACH 2026 இல் இந்தியா ஆண்டின் சிறந்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நோக்கியா நிறுவனமானது தனது மிகப்பெரிய உலகளாவிய நிலையான நெட்வொர்க்குகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியை சென்னை சிறுசேரியில் உள்ள சிப்காட் பகுதியில் திறந்து வைத்துள்ளது.
  • பாதுகாப்பான இணைய தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இரண்டாவது செவ்வாய்க் கிழமை (பிப்ரவரி 10) அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டின் கருத்துரு  “Smart Tech, Safe Choices: Exploring the Safe and Responsible Use of Artificial Intelligence (AI)” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்