TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 23 , 2026 2 days 42 0
  • ஐஐடி மெட்ராஸ் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் காமர்சிட்டியில் தனது முதல் பயன்பாட்டுச் செயற்கை நுண்ணறிவு (AI) புத்தாக்க மையத்தைத் தொடங்கியது.
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), தமிழ்நாட்டிலிருந்து கனடாவிற்கு 0.5 மெட்ரிக் டன் (MT) எடையுள்ள புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசியின் முதல் ஏற்றுமதியை மேற்கொண்டது.
  • இந்தியாவின் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளை உலகளவில் " A World Exclusive " என்ற முழக்கத்தின் கீழ் ஊக்குவிப்பதற்காக, தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது (DPIIT) 'பாரத் GI' முன்னெடுப்பைத் தொடங்கி உள்ளது.
  • இந்தியக் கடற்படை நடத்தும் பலதரப்பு கடற்படைப் பயிற்சியான Exercise MILAN-இன் 13வது பதிப்பு ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டது.
  • கர்நாடகாவின் வேமகலில் H125 க்கான தனது முதல் தனியார் துறை ஹெலிகாப்டர் இறுதி அசெம்பிளி லைனை (FAL) இந்தியா தொடங்கியுயுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்