TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 3 , 2026 14 days 116 0

v இந்திய விமானப்படையானது (IAF) ராஜஸ்தானின் பொக்ரானில் ‘Vayu Shakti’ எனும் பயிற்சியை நடத்தி வருகிறது.

v இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் சுமார் 520 ஜிகாவாட்களைத் தாண்டியுள்ளது என்ற ஒரு நிலையில் இதில் பாதிக்கும் மேற்பட்டவை புதைபடிவ எரி பொருள் அல்லாத மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன.

v மங்களூரு சர்வதேச விமான நிலையம், 2024க்குப் பிறகு, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக, சிறந்த வருகை வசதி தரும் விமான நிலையத்திற்கான 2025 விமான நிலைய சேவை தர (ASQ) விருதை வென்றது.

v இந்திய ராணுவத்திற்கும் ஜப்பான் ராணுவத்திற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான Dharma Guardian என்பதின் 7வது பதிப்பு உத்தரகண்ட் மாநிலம் சௌபாட்டியாவில் தொடங்கியது.

v 14 வயது நிரம்பிய சிறுமிகளுக்கான நாடு தழுவிய மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி இயக்கத்தை இந்தியப் பிரதமர் ராஜஸ்தானின் அஜ்மீரில் தொடங்கி வைக்கவுள்ளார்.

v ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியானது உலகின் முதல் இறையாண்மை கொண்ட நிதிசார் கிளவுட் சேவைகள் உள்கட்டமைப்பை (SFCSI) தொடங்கியுள்ளது.

v குஜராத்தின் சனந்தில் உள்ள இந்தியாவின் முதல் மேம்பட்ட நினைவகத் தொகுப்பு பிரிவு, சோதனை, குறியிடுதல் மற்றும் பேக்கேஜிங் (ATMP) செயல்பாடுகளை மைக்ரான் டெக்னாலஜி நிறுவனம் தொடங்கியுள்ளது என்ற நிலையில் இது உலகின் மிகப்பெரிய 500,000 சதுர அடி அளவிலான  உயர்த்தப்பட்ட தளம் கொண்ட குறைக் கடத்தி சுத்தம் செய்யும் அறையைக் கொண்டுள்ளது.

v ஜம்மு காஷ்மீர் 67 ஆண்டுகளுக்குப் பிறகு 2025–26 ரஞ்சி டிராபி கிரிக்கெட் கோப்பையை முதன்முறையாக வென்றுள்ளது.

v சச்சின் டெண்டுல்கர் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) சாலைப் பாதுகாப்புக்கான உலகளாவிய சாம்பியனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

v ஆயுஷ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ஆரோக்கிய கண்காட்சி 2026, மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகானில் நிறைவடைந்தது.

v மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் 200க்கும் மேற்பட்ட நக்சல் தொடர்புடைய நினைவுச் சின்னங்களை பாதுகாப்புப் படையினர் Operation Demolishment என்ற நடவடிக்கையின் கீழ் இடித்துள்ளனர்.

v பிரான்சுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்திருந்து (DTAC) மிகவும் விரும்பத் தக்க நாடு (MFN) என்ற பிரிவை இந்தியா நீக்கியுள்ளது.

v கோவா, பனாஜியில் உள்ள தேசிய கடல்சார் நிறுவனத்தில் (NIO) நான்காவது உலகப் பெருங்கடல் அறிவியல் மாநாடு 2026 என்பதை நடத்துகிறது என்ற நிலையில் இது கடல் ஆரோக்கியம், காலநிலை மீள்தன்மை மற்றும் நிலையான கடல்சார் பொருளாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

v கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபனோஸ் சகெல்லாரிடிஸ் டெல்லி ஓபன் 2026 இல் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

v 2025 விமான நிலைய சேவை தர (ASQ) விருதுகளில், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் CSMIA, சுமார் 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பிரிவில், ஆசியா-பசிபிக்கின் சிறந்த புறப்பாடு சேவை வழங்கும் விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது.

v ராஜஸ்தான் அரசாங்கம் மவுண்ட் அபுவை அபுராஜ் என்றும், காமன் என்பதை கம்வான் என்றும், ஜஹாஸ்பூர் என்பதை யக்யாபூர் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளது.

o ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள மவுண்ட் அபு என்பது, ராஜஸ்தானின் ஒரே மலைவாழிடமாகும் என்பதோடு இது தில்வாரா ஜெயின் கோயில்களுக்குப் பிரபலமானது.

v அஸ்ஸாமின் திப்ருகரில் உள்ள தேசிய நீர்வழி-2 இல் போகிபீல் சுங்கம் மற்றும் குடியேற்ற வளாகம், துப்ரி சுங்கம் மற்றும் குடியேற்ற வளாகம் மற்றும் புதுப்பிக்கப் பட்ட IWAI பாரம்பரிய கட்டிடம் உள்ளிட்ட மூன்று முக்கிய உள்நாட்டு நீர்வழி தொடர்பான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

o பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள தேசிய நீர்வழி-2, வடகிழக்கில் ஒரு முக்கியப் பொருளாதார வழித்தடமாகும் என்பதோடு இது சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துகிறது.

v மாநிலம் முழுவதும் 1,06,905 பேர் பயனடையும் வகையில், பூர்வீக நிலமற்ற பழங்குடிக் குடும்பங்களுக்கு நிலப்பட்டாக்களை விநியோகிப்பதற்காக அசாம் அரசு தேமாஜி மாவட்டத்தில் மிஷன் பசுந்தரா 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

o இந்தத் திட்டம் வன உரிமைகள் சட்டம், 2006 இன் கீழ் நில உரிமைகளையும் வழங்குவதுடன் சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதன் மூலம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நில தகராறுகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

v இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் செய்த போது விவசாய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக சிறப்புக் கிராமங்கள் (Villages of Excellence) என்ற முயற்சியை அறிவித்தார்.

o விவசாயக் தொகுதிகளை தொழில்நுட்பம் சார்ந்த மண்டலங்களாக மாற்றுவதற்கும், துல்லிய விவசாயம், செயற்கைக்கோள் அடிப்படையிலான நீர்ப் பாசனம் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு அடிமட்டநிலை விரிவாக்கமாகும்.

v பிரதமரின் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனாவின் கீழ் மேற்கூரை சூரிய சக்தி உற்பத்தி அமைப்புகளின் எண்ணிக்கை பிப்ரவரி 2024 முதல் 30 லட்சம் வீடுகளைத் தாண்டியுள்ளன.

o இந்தத் திட்டமானது இந்தியா முழுவதும் ஒரு கோடி வீடுகளில் கூரை சூரிய மின்சாரத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

v நேரு மலையேறுதல் நிறுவனம் (NIM) மற்றும் ஜவஹர் மலையேறுதல் மற்றும் குளிர்கால விளையாட்டு நிறுவனம் (JIM&WS) ஆகியவற்றின் கூட்டுக் குழு பிப்ரவரி 22, 2026 அன்று அகோன்காகுவா மலையுச்சியை  வெற்றிகரமாக அடைந்தது.

o தென் அமெரிக்காவின் மிக உயரமான சிகரம் அகோன்காகுவா ஆகும் என்பதோடு மேலும் இது ஆசியாவிற்கு வெளியே உலகின் இரண்டாவது உயரமான சிகரமாகும்.

v மேற்கு வங்காள அரசு இடைக்கால பட்ஜெட்டில் வங்காள யுவ சாதி திட்டம் 2026 என்பதை அறிவித்தது என்பதோடு இது வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 1,500 ரூபாய் வழங்குகிறது.

o இந்தத் திட்டம் மேற்கு வங்காளம் முழுவதும் ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப் படும்.

v கடல் புல் மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி உலக கடல் புல் தினம் கொண்டாடப்படுகிறது.

o 2026 ஆம் ஆண்டின் கருத்துரு "Seagrasses Enrich Ocean Biodiversity and Fisheries" என்பதாகும்.

v அனைத்து மக்களுக்கும் சமத்துவம் மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி சுழிய பாகுபாடு தினம் அனுசரிக்கப்படுகிறது.

o 2026 ஆம் ஆண்டின் கருத்துரு “People First” என்பதாகும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்