TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 4 , 2026 12 days 58 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ட்ரோக் ரக பாராசூட்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ரம்பில்லியில், வாரீ எனர்ஜிஸ் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த லித்தியம்-அயன் பேட்டரி ஜிகாஃபாக்டரி வளாகத்தை அமைக்கவுள்ளது.
  • கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களுக்கான கூட்டு பிராந்திய அலுவலக மொழிகள் மாநாடு (ராஜ்பாஷா சம்மேளனம்) அகர்தலாவில் பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் நடத்தப் பட்டது.
  • நவரத்னா அந்தஸ்து கொண்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அலுமினிய கம்பெனி லிமிடெட் (NALCO), புதிய IA91 தர அலுமினிய அலாய் உலோக வார்ப்பு கட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மாலத்தீவின் முக்கியத் தீவுகளான ஃபாஃபு மற்றும் தாலு தீவுகளுக்கு இடையே புதிய போக்குவரத்து சேவைகளைத் தொடங்க இந்தியா தனது முதல் அதிவேகப் படகுகளை மாலத்தீவுக்கு பரிசாக வழங்கியுள்ளது.
  • அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒருங்கிணைந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் அதன் கோர்ராம்ஷஹர்-4 ("கெய்பார்") உள்ளிட்ட உந்துவிசை ஏவுகணைகளை ஏவியுள்ளது.
  • ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய பெரிய ஒருங்கிணைந்த இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்து விட்டதாக அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • நிரந்தர அதிபரைத் தேர்ந்தெடுக்கும் வரை ஈரானை வழிநடத்தும் இடைக்கால மூன்று நபர் தலைமைத்துவக் குழுவின் தற்காலிக உச்சத் தலைவராகவும், சட்ட வல்லுநராகவும் ஆயத்துல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அரியவகை நோய்கள், அவற்றின் நோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிப்ரவரி 28 அன்று (லீப் ஆண்டுகளில் பிப்ரவரி 29) அரிய வகை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு  " More Than You Can Imagine " என்பதாகும்.
  • காது கேளாமை மற்றும் காதுகளின் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் தேதி உலக செவித்திறன் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு  "From communities to classrooms: hearing care for all children" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்