TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 9 , 2026 15 hrs 0 min 30 0
  • ஆகாஷவானியின் கூடுதல் தலைமை இயக்குநர் தீரஜ் காகடியா எழுதிய “Mahatma: A Great Communicator” என்ற புத்தகம் புது தில்லியில் வெளியிடப்பட்டது.
  • அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் உள்ள எக்கினஸ்  வெந்நீரூற்றானது ஆறு ஆண்டுகள் செயலற்ற நிலைக்குப் பிறகு மீண்டும் வெடித்தது.
    • உலகின் மிகப்பெரிய அமிலத்தன்மை கொண்ட  வெந்நீரூற்று ஆன இது யெல்லோஸ்டோனில் உள்ள அதி புவிவெப்பப் பகுதியான நோரிஸ்  வெந்நீரூற்றுப் படுகையில் அமைந்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் 5 ஆம் தேதி வரை ஜனஒளஷதி வாரம் 2026 கொண்டாடப்படுவதையொட்டிஇந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாரியத்தால் (PMBI) இந்தியா முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
  • அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் போது சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட சுமார் $130 பில்லியன் கட்டணங்களைத் திருப்பித் தருமாறு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
  • அலைபேசி மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான உலகின் மிகப்பெரிய நிகழ்வான அலைபேசி உலக காங்கிரஸ் 2026, ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறுகிறது.
    • 2026 ஆம் ஆண்டின் கருத்துரு "The IQ Era" ஆகும்.
  • கர்நாடக அரசு 2026–27 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலைத் தடை செய்வதாக அறிவித்தது.
    • இந்தக் கட்டுப்பாடு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் டிக்டாக் போன்ற தளங்களுக்குப் பொருந்தும்.
  • உலகம் முழுவதும் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டின் கருத்துரு "Rights. Justice. Action. For ALL Women and Girls" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்