இந்தியாவில் உள்ள செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கசர்வம் AI நிறுவனம் ஆனது, 'சர்வம் புத்தொழில் திட்டத்தை' (Sarvam Startup Program) அறிமுகப்படுத்தியுள்ளது.
இளைஞர்களின் திறன்களைக் கண்டறிந்து வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான திறன் கணக்கெடுப்பான 'சக்சாம் திறன் கணக்கெடுப்பை' மும்பை புறநகர் மாவட்டம் தொடங்கியுள்ளது.
தேசிய நீர்வழி-2 என்ற பாதையின் பகுதியான, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே இந்தியாவின் முதல்ஆற்றுவழிக் கலங்கரை விளக்கங்களைஇந்தியா உருவாக்க உள்ளது.
உயிரித் தொழில்நுட்பம், பொருளாதாரக் கொள்கை மற்றும் கல்வி ஆகியவற்றில் உலகளாவிய தலைமை மற்றும் பங்களிப்பிற்காக, TIME இதழ்தனது '2026-ஆம் ஆண்டின் சிறந்த 16 பெண்கள்' பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தரேஷ்மா கேவல்ரமணி, ரேஷ்மா சௌஜானி மற்றும் சஃபீனா ஹுசைன்ஆகிய மூவரைப் பெயரிட்டுள்ளது.
லட்சத்தீவின் கவரட்டி தீவில், கடல் வெப்ப ஆற்றல் மாற்றம் (OTEC) அடிப்படையிலான நாட்டின் முதல் ஒருங்கிணைந்த ஆலையை இந்திய அரசு நிறுவி வருகிறது.
மகாராஷ்டிராவின் ஜால்னாவில் நடைபெறும் 'ஹட்டி ரிசாலா' திருவிழா, 138 ஆண்டு காலப் பாரம்பரியத்தை நினைவுகூர்வதோடு, சமூக நல்லிணக்கம், கலாச்சார உள்ளடக்கம் மற்றும் சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.
இந்தியாவின் பழங்குடியினச் சமூகங்களின் வளமான பாரம்பரியங்கள், கலைகள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்டாடும் வகையில், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் உள்ள லோக் பவனில் 'டார்ஜிலிங் மலைத் திருவிழாவை' குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.
'சம்ஸ்காரா: உறுதிப்பாடு, இடமளித்தல், முன்னேற்றம்' (Samskara: Assertion, Accommodation, Advancement) என்ற கருத்துருவின் கீழ், Observer Research Foundation (ORF) மற்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) இணைந்து 'ரைசினா பேச்சுவார்த்தை' 2026 என்ற நிகழ்வை புது தில்லியில் நடத்தியது.
மூளையில் சேதமடைந்த டோபமைனை உற்பத்தி செய்யும் நியூரான்களை மாற்றி அமைக்க தூண்டப்பட்ட ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்களை (iPS Cells) பயன்படுத்தும், பார்கின்சன் நோய்க்கானஉலகின் முதல் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிநாட்டினர் தமிழ்நாட்டின் வாழ்க்கை முறை, வேலை, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் 'TNExpat' என்ற டிஜிட்டல் தளத்தைத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
வானியலாளர்கள் 'ACES' (ALMA Central Molecular Zone Exploration Survey) தரவுகளைப் பயன்படுத்தி பால்வெளி மண்டலத்தின்மையப் பகுதியின் இதுவரை கண்டிராத மிகப்பெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.