TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 11 , 2026 7 days 108 0
  • ஆக்ரோஷமான மற்றும் ஆபத்தான நாய் இனங்களை முறைப்படுத்த அல்லது தடை செய்வதற்காக, "செல்லப்பிராணிகள் மற்றும் சமூக நாய்கள் துணை விதிகளை" உருவாக்குவதற்குத் தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை சத்தீஸ்கரில் நடைபெறவுள்ளது.
  • ஈரானின் முன்னாள் முதன்மைத் தலைவரான அயதுல்லா அலி காமெனியின் மகன், மொஜ்தபா காமெனி, ஈரானின் அடுத்த முதன்மைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இக்குடியரசின் நிறுவனர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி மற்றும் 37 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்த அலி கமேனி ஆகியோருக்குப் பிறகு, அவர் குடியரசின் மூன்றாவது உச்ச தலைவராக இருப்பார்.
  • குஜராத் மாநிலதின் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 2026 ஆம் ஆண்டிற்கான ICC ஆடவர்களுக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.
  • இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு விரைவான காவல்துறை உதவியை வழங்குவதற்கும், கேரளா முழுவதும் உள்ள பெண்களின் இரவு நேரப் பாதுகாப்பை மேம்படுத்தவும் கேரள மாநிலக் காவல்துறை நிர்பயா நிஷா என்ற முன்னெடுப்பைத் தொடங்க உள்ளது.
  • உலகின் முதல் உரிமையாளர் அடிப்படையிலான சாலை மிதிவண்டிப் போட்டியான, மிதிவண்டி லீக் ஆஃப் இந்தியாவின் முத்திரைச் சின்னத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் வெளியிட்டார்.
  • பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ், பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி மையங்களில் (PMBJAKs) கிடைக்கும் மலிவு விலை பொதுப்பெயர் (Generic) மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7ம் தேதி ஜனௌஷதி திவாஸ் (மக்கள் மருந்தக நாள்) கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்