TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 12 , 2026 6 days 92 0
  • அமெரிக்கா, 6,000 மைல்களுக்கும் (சுமார் 13,000 கி.மீ.) அதிகமான செயல்பாட்டுத் தொலைவு கொண்ட, நிலப்பரப்பிலிருந்து ஏவக்கூடிய மினிட்மேன் III எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையைச் சோதனை செய்தது.
  • நடிகர் ஷாருக்கான், 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான நிகர சொத்து மதிப்புடன் 2026-ஆம் ஆண்டிற்கான ஹுருன் உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.
  • டெல்லியில் இந்தியாவின் முதல் ரிங் மெட்ரோவை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • நேபாளத்தின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி (RSP), 2026 பொதுத்தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் பாலேந்திர ஷா, அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்.
  • R.M. நாச்சம்மை, கர்நாடகாவில் உள்ள கைகா அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4-வது அலகுகளின் தலைமை கண்காணிப்பாளராக 2026 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி முதல் பொறுப்பேற்றதன் மூலம், இந்தியாவில் செயல்படும் அணுமின் நிலையத்திற்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
  • சந்தால் இன கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் சர்வதேச சந்தால் சபையால் டார்ஜிலிங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட 9வது சர்வதேச சந்தால் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
    • இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடியினச் சமூகங்களில் ஒன்றான சந்தால் பழங்குடியினர், முக்கியமாக ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களில் வசிக்கின்றனர்.
  • திருவனந்தபுரம் மாநகராட்சி, தூய்மை இந்தியா திட்டம் (நகர்ப்புறம்) 2.0ன் கீழ், கழிவுகளை அகற்றுவதற்கும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையைத் தவிர்ப்பதற்கும் 'ஜி-ஸ்பைடர்' (G-SPIDER) என்ற செயற்கை நுண்ணறிவு இயந்திர மனிதன் /ரோபோவை அமையிழஞ்சான் கால்வாயில் பணியமர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்