இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் பகுதியில் உள்ள இமயமலை அடிவாரத்தில் அசிடாக்சாந்தா பாராடோடோஃப்லாவா மற்றும் ஹெமிலியா சுனேரியே ஆகிய இரண்டு புதிய பழ ஈ இனங்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில் முதன்முறையாக ராகோலெடிஸ் என்ற பழ ஈ பேரினம் பதிவு செய்யப்பட்டுள்ளது; இவை ட்ரைபெடினே துணைக்குடும்பத்தைச் சேர்ந்தவை.
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC), அதன் அணுகல் முன்னெடுப்பான 'த்வனி ஸ்பந்தனா' திட்டத்திற்காக 12வது பொதுத்துறை நிறுவன (PSU) தேசிய விருதை வென்றுள்ளது.
'த்வனி ஸ்பந்தனா' என்பது பார்வை குறைபாடுள்ள பயணிகள் பேருந்துகளை அடையாளம் காணவும், சுயமாகப் பயணம் செய்யவும் உதவும் ஒரு உள்ளக அமைப்பாகும்.
சிக்கிமின் பாக்கியாங் மாவட்டத்தில் "Orchids for Beauty & Prosperity" என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான இந்திய ஆர்க்கிட் திருவிழா நிறைவடைந்தது.
இந்தியா மற்றும் செஷல்ஸ் நாடுகளுக்கு இடையே 11-வது கூட்டு இராணுவப் பயிற்சி 'லமிடியே-2026' சீஷெல்ஸ் பாதுகாப்பு அகாடமியில் நடைபெற்று வருகிறது.
12-வது ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய அரசு வழக்கறிஞர்கள் மாநாடு புது தில்லியில் நடைபெற்றது.
CRED நிறுவனம் கட்டண ஒருங்கிணைப்பாளராக (Payment Aggregator) செயல்பட இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய 'அரக்கு கௌனி’ என்ற மாநிலத்தின் முதல் பழங்குடியினர் உண்ணும் சிறுதானியங்களின் உணவுப் பட்டியலைத் தொடங்கி வைத்தார்.
மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படும் இஸ்லாமோஃபோபியாவிற்கு எதிரான சர்வதேச தினம், முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சகிப்புத்தன்மை, மனித உரிமைகள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.
கணித மாறிலியான π (pi), 3.14159 இன் முதல் மூன்று இலக்கங்கள் (3.14) தேதியுடன் (3/14) ஒத்துப்போவதால், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14 அன்று உலகளவில் 'பை தினம்' கொண்டாடப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Mathematics and hope".