TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 20 , 2026 12 hrs 0 min 16 0
  • அசாம் தேயிலைத் தோட்டங்களில் பிராகோனிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலோனஸ் (காரினிசிலோனஸ்) மகாதேப் என்ற புதிய ஒட்டுண்ணி குளவி இனம் கண்டறியப் பட்டு உள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 189 ஆண்டுகளுக்குப் பிறகு ஹென்கெலியா மோனோ ஃபில்லா என்ற அரிய வகைத் தாவரம் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது, இது கெஸ்னேரியாசி குடும்பத்தைச் சேர்ந்தது; இது முதன்முதலில் 1836 ஆம் ஆண்டு சேகரிக்கப் பட்டது.
  • திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பேச்சி-வாழானி வனவிலங்கு சரணாலயத்தில் டிராவிடா பேரினத்தையும் மோனிலிகாஸ்ட்ரிடே குடும்பத்தையும் சேர்ந்த டிராவிடா வாழானியா என்ற புதிய மண்புழு இனம் கண்டறியப்பட்டுள்ளது.
  • 1,143 கி.மீ நீளத்திற்கும் அதிகமான செயல்பாட்டு மெட்ரோ பாதைகளுடன் இந்தியாவின் மெட்ரோ ரயில் வலையமைப்பு உலகின் மூன்றாவது பெரிய வலை அமைப்பாக மாறியுள்ளது.
    • 2014-ல் 5 நகரங்களில் வெறும் 248 கி.மீ. ஆக இருந்த மெட்ரோ வலை மைப்பு தற்போது 29 நகரங்களுக்கு விரிவடைந்துள்ள நிலையில் இந்த விரைவான வளர்ச்சியானது, இந்தியாவை சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் வைக்கிறது 
  • 2026 ஆம் ஆண்டிற்கான தேசியப் பாரா தடகள சாம்பியன்ஷிப், மார்ச் 19 முதல் 21 ஆம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெறும்.
  • பழங்குடியின கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக புது டெல்லியில் 2026 ஆம் ஆண்டிற்கான பாரத் டிரைப்ஸ் ஃபெஸ்ட் தொடங்கப்பட்டது.
  • பிரேசில், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலை ஒழுங்கு படுத்துவதற்காக புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
  • தூக்கமின்மை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தூக்கக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகத் தூக்க தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சமபகல்/உத்தராயணத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 13/2026) அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Sleep Well, Live Better" என்பதாகும் .
  • இணையவழி மற்றும் நேரடிச் சந்தைகளில் நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தவும் உரிமைகளைப் பாதுகாக்கவும், 2026-ஆம் ஆண்டின் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மார்ச் 15 அன்று அனுசரிக்கப்பட்டது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Safe Products, Confident Consumers" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்