TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 23 , 2026 4 days 65 0
  • பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் முதல் LPG ATM-ஐ குருகிராமில் அறிமுகப் படுத்தியது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மின்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, "Electrifying Growth, Empowering Sustainability, Connecting Globally" என்ற கருத்துருவுடன் 2026 ஆம் ஆண்டிற்கான பாரத் மின்சார உச்சி மாநாடு புது தில்லியில் நடைபெற்றது.
  • .bank.in இணைய முகவரி பின்னொட்டை/டொமைனை அறிமுகப் படுத்தியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி மத்திய வங்கியிடமிருந்து ‘ஆண்டின் சிறந்த முன்னெடுப்பு’ விருதை வென்றது.
  • இந்திய ராணுவம் போர்த் தயார்நிலை மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட போர்த் திறன்களைச் சோதிக்க தென்னகப் படைப்பிரிவின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்சியில் Amogh Jwala எனும் பயிற்சியை நடத்தியது.
  • சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் இனவெறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Mobilizing Political Will: 60 Years of Commemorating the International Day for the Elimination of Racial Discrimination" என்பதாகும்.
  • காடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று சர்வதேச காடுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Forests and Economies” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்