TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 24 , 2026 3 days 51 0
  • இந்தியக் கடலோரக் காவல்படைக்கான இரண்டு அடுத்த தலைமுறை ரோந்து கப்பல்களுக்கான அடிப்பலகை இடும் விழா மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் நடைபெற்றது.
    • இந்தக் கப்பல்கள் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோரக் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்காக ஆறு மேம்பட்ட ரோந்து கப்பல்களை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • மிசோரம் மாநிலத்தின் வசந்தகால திருவிழாவான சப்சார் குட் , 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொண்டாடப்பட்டது.
    • இது மிசோ கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதோடு, ஜும் சாகுபடி (இடம் பெயர்வு விவசாயம்) நிலத்தை சுத்தம் செய்யும் பணி நிறைவடைவதைக் குறிக்கிறது.
  • மனநலிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக மனநலிவு நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Together Against Loneliness.
  • வாசிப்பு, எழுதுதல் மற்றும் கவிதைகளைப் பகிர்ந்து கொள்வதை ஊக்குவிக்கவும், மொழியியல் பன்முகத் தன்மையை ஆதரிக்கவும் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21 அன்று உலக கவிதை தினம் கொண்டாடப்படுகிறது.
  • பீகார் மாநிலத்தின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டு மார்ச் 22 முதல் 24 வரை பீகார் திவாஸ் ஆனது  “Unnat Bihar, Ujjwal Bihar” என்ற கருத்துருவின் கீழ் கொண்டாடப் பட்டது.
    • இது மார்ச் 22, 1912 அன்று வங்காள மாகாணத்திலிருந்து பீகார் பிரிந்து உருவானதை நினைவுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்