TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 27 , 2026 15 hrs 0 min 16 0
  • புது தில்லியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான BRICS CCI WE (BRICS வர்த்தகம் மற்றும் தொழில்துறை மகளிர் அதிகாரமளித்தல் கூட்டமைப்பு) வருடாந்திர மகளிர் உச்சி மாநாட்டில், கல்பனா சோரன் 'Women Empowerment Trailblazer/மகளிர் அதிகாரமளித்தல் முன்னோடி' விருதைப் பெற்றார்.
  • தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), தமிழ்நாட்டின் முட்டம் கடற்கரைக்கு அப்பால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிதக்கும் LiDAR மிதவை அமைப்பை வெற்றிகரமாகச் சோதித்தது.
    • இது லேசர் தொழில்நுட்பத்தைப் (LiDAR) பயன்படுத்தி, கடலில் காற்றின் வேகம் மற்றும் வானிலைத் தரவுகளை மிகத் துல்லியமாக அளவிடும் ஒரு மேம்பட்ட கடல்சார் தளமாகும்.
  • 2024–25 ஆம் ஆண்டிற்கான சுய உதவிக் குழு வங்கி இணைப்பு திட்டத்தில் சிறந்த செயல்பாட்டிற்கான தேசிய விருதை கர்நாடகா கிராமின் வங்கி வென்றுள்ளது.
  • முதலாவது தேசிய உள்விளையாட்டு அரங்க தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேசுவரில் உள்ள கலிங்கா மைதானத்தில் தொடங்கின.
  • இந்திய விமானப்படை (IAF), இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் மூலம் ஏவப்படும் ஆளில்லா விமான அமைப்பை உருவாக்க 'வாயு பாண்' திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
    • பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து கீழே ஏவப்படும் ஒரு சிறிய தன்னிசையான ஆளில்லா விமானமான இது கண்காணிப்பு அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும்.
  • காசநோய் (TB) குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Yes! We Can End TB: Led by countries, powered by people" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்