16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்ததன் மூலம், இத்தகையக் கட்டுப்பாட்டை விதித்த தென்கிழக்கு ஆசியாவின் முதல் நாடாக இந்தோனேசியா திகழ்கிறது.
கடலோர மற்றும் தீவுப் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்துவதற்காக, இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளும் இணைந்து தீப் சக்தி நடவடிக்கையைத் நடத்தின.
வான்வழி சாதனைகளுக்காகவும், ஹாட் ஏர் பலூனில் அதிக உயரத்தில் பறந்து உலக சாதனை படைத்ததற்காகவும் அறியப்பட்ட ரேமண்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பத்ம பூஷன் விருது பெற்றவருமான விஜய்பத் சிங்கானியா (87), மும்பையில் காலமானார்.
இந்தியா தனது 11வது திறந்தவெளி உரிமக் கொள்கைச் சுற்றைத் தொடங்க உள்ள நிலையில் இதன் மூலம், சுமார் 21 எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொகுதிகள் ஆய்வுக்காக வழங்கப் பட உள்ளன.
உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தக் கொள்கை அமைந்துள்ளது.
வன்முறையற்றத் தன்மை, கருணை மற்றும் உரையாடல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற 'உலக பௌத்த அமைதி மாநாடு 2026' ஹைதராபாத்தில் நடைபெற்றது.
கடல்சார் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்காக, 'திட்டம் 17A'-வின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐந்தாவது நீலகிரி-வகை போர்க்கப்பலான INS துனகிரியை இந்திய கடற்படை பெற்றுக்கொண்டது.