TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 3 , 2026 14 hrs 0 min 19 0
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையானது (RGGGH), சிறுநீர்ப்பை நரம்புகளைக் கட்டுப்படுத்தும் கருவியைப் பொருத்தி சிறுநீரகப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்கக் கூடிய வகையில் தென்னிந்தியாவின் முதல் சாக்ரல் நியூரோ மாடுலேஷன் (SNM) அறுவை சிகிச்சையைச் செய்துள்ளது.
  • கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனமானது (GRSE), ஏவுகணை போர்க்கப்பலான துனகிரி, கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான ஆய்வுக் கப்பலான சன்ஷோதக் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பலான அக்ரே ஆகிய மூன்று முக்கியக் கப்பல்களை இந்திய கடற்படைக்கு வழங்கியுள்ளது.
  • இந்தியக் கடற்படை, ஆழமற்ற மற்றும் கடலோரப் பகுதிகளில் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டிலேயே கட்டப்பட்ட இரண்டாவது கப்பலான மல்வான்-ஐப் பெற்றுள்ளது.
  • 11 அடுத்தத் தலைமுறை கடலோர ரோந்துக் கப்பல்கள் (NGOPV) திட்டத்தின் முதல் கப்பலான INS ஷாச்சி கோவாவில் தொடங்கப்பட்டது.
  • ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள மஹி அணைக்கு அருகில் அமையவுள்ள மஹி பன்ஸ்வாரா அணுமின் திட்டத்திற்கான அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்திய கடற்படையானது, நான்கு பெரிய ஆய்வுக் கப்பல்களில் கடைசி கப்பலான கடல்சார் வரைபடங்கள் மற்றும் ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப் படும் சன்ஷோதக்-ஐப் பெற்றுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மா ஷீட்லா கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழந்தனர்.
  • மக்களவை சபாநாயகர் பூர்வாஞ்சல் பிராந்தியத்தின் மண் மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சார விழாவான பூர்வாஞ்சல் மஹோத்சவ் மாட்டி-9 விழாவில் உரையாற்றினார்.
  • துணைத் குடியரசுத் தலைவர் மற்றும் சட்ட அமைச்சரால் 'நியாய சேது' என்ற AI சாட்பாட் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • 'நியாய சேது' என்பது குடிமக்கள் சட்டங்களை எளிதில் புரிந்துகொள்ள உதவும் குரல்வழி மற்றும் பன்மொழி செயற்கை நுண்ணறிவு சட்ட உதவியாளராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்