TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 4 , 2026 3 days 45 0
  • சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தியத் தேர்தல் ஆணையமானது (ECI) சந்தீப் ராய் ரத்தோரை ஜி. வெங்கட்ராமனுக்குப் பதிலாக காவல்துறை தலைமை இயக்குநராகவும் (DGP) மற்றும் காவல் படைத் தலைவராகவும் (HoPF) நியமித்துள்ளது.
    • தேர்தல் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று நடத்துவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு 'தேர்தல் டிஜிபி'யை நியமித்த போதிலும், மாநிலத்தில் நிரந்தரமான 'படைத் தலைவரே' (HoPF) இல்லாத காரணத்தினால், திரு. ரத்தோர் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
  • தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (NCBC) தலைவராக நிரஞ்சன் ஜோதி மற்றும் உறுப்பினராக கிரண் உமேஷ் மஹல்லே ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
  • மதியிறுக்கப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு, அங்கீகாரம் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 அன்று உலக மதியிறுக்க பாதிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Autism and Humanity – Every Life Has Value” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்