4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு, நான்கு வகையான டெங்கு வைரஸ்களுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கும் 'Qdenga' (TAK-003) தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
வருமான வரித் தாக்கல், இணக்கம், மின்னணு வழி-சரிபார்ப்பு மற்றும் குறைகளைத் தீர்க்க உதவும் வகையில் கர் சாத்தி என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாட்பாட் தளத்தை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
மியான்மர் நாட்டின் நாடாளுமன்றத்தால் அந்நாட்டின் அதிபராக மின் ஆங் ஹ்லேங் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தூதராக பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கை இந்திய அரசு நியமித்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான தீன் தயாள் உபாத்யாய் மற்றும் நானாஜி தேஷ்முக் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரசுகார் விருதுகளில் திரிபுராவின் செபாஹிஜாலா (சிறந்த மாவட்ட பஞ்சாயத்து), காஞ்சாபாரி (ஆரோக்கியமான பஞ்சாயத்து - முதலிடம்), மற்றும் வைகுந்தபூர் (பெண்கள் நட்புசார் பஞ்சாயத்து - மூன்றாமிடம்) ஆகிய மூன்று பஞ்சாயத்துகள் முதன்மையான விருதுகளை வென்றுள்ளன.
குடியரசுத் துணைத் தலைவர் C. P. ராதாகிருஷ்ணன், சம்விதான் சதனிலுள்ள 58 சுவரோவியங்களை இந்தியாவின் நாகரிகச் சின்னங்களாக விளக்குகின்ற, சுதா மூர்த்தி எழுதிய “Tides of Time” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று வட அட்லாண்டிக் ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 4 அன்று நாட்டோ (NATO) தினம் அனுசரிக்கப் படுகிறது.
இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 5, 2026 அன்று தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Maritime India – Empowering Progress" என்பதாகும்.
அமைதி மற்றும் தார்மீக விழுமியங்களை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 அன்று சர்வதேச மனசாட்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Together for Peace: From Conscience to Collective Action" என்பதாகும்.