TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 10 , 2026 2 days 51 0
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது தமிழகத்தில் அதிரடி மாற்றங்களை மேற் கொண்டுள்ளதன்படி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் அவர்களும், காவல்துறை தலைமை இயக்குநராக (ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை - DVAC) சந்தீப் மிட்டல் அவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
  • ஐக்கிய அரபு அமீரகம் உலகின் முதல் 10G (10 ஜிகாபிட்) U6GHz இணையச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பிர்லா மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் (BIMTECH) நடத்திய 'ஹெர்ம்ஸ் உரையாடல் 6.0' என்ற விவாதப் போட்டியில் ரோஹ்டக் இந்திய மேலாண்மை கழகம் வெற்றி பெற்றுள்ளது.
  • இந்திய வம்சாவளி அறிவியலாளரான தீப் ஜரிவாலா, அமெரிக்காவின் UT-ORNL பல்கலைக்கழகத்தின் குவாண்டம் சாதனங்களுக்கான ஆளுநர் இருக்கைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிளாங்கா விளாசிக், பெங்களூருவில் நடைபெறவுள்ள உலக 10K பெங்களூரு 2026 ஓட்டப் பந்தயத்தின் உலகளாவிய தூதராக நியமிக்கப் பட்டு உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்