TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 11 , 2026 15 hrs 0 min 31 0
  • சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் (IRENA) அறிக்கையின்படி, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திறனில் (2026 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 274.68 ஜிகாவாட்) சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
  • ₹1 டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) விற்றுமுதலைத் தாண்டிய முதல் இந்திய FMCG (வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள்) நிறுவனம் என்ற பெருமையை அமுல் பெற்றுள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தில் அமையவுள்ள கமலா (1,720 மெகாவாட்) நீர்மின் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இத்திட்டமானது மாநில அரசுடன் இணைந்து NHPC (தேசிய நீர்மின் சக்தி கழகம்) மூலம் உருவாக்கப்பட உள்ளது.
  • போபால் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்ப தாரர்களுக்காக பிரெய்லி மற்றும் சைகை மொழிச் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
    • இது மாற்றுத் திறனாளிகளுக்காக இந்தியப் பாஸ்போர்ட் அலுவலகங்களில் முன்னெடுக்கப் பட்ட முதல் முன்னெடுப்பு ஆகும்.
  • சாமுவேல் ஹானிமனின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Homoeopathy for Sustainable Health" என்பதாகும்.
  • ஜேம்ஸ் பார்கின்சனின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 11-ஆம் தேதி உலக நடுக்குவாத நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Bridge the care gap" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்