உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்நாட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பை மிகவும் நன்கு வலுப்படுத்துவதற்காக, மத்திய ஆயுதக் காவல் படைகளுக்காக (CAPFs) அர்ப்பணிக்கப் பட்ட இந்தியாவின் முதல் உயர்மட்ட மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குவார்.
2025-26 ஆம் நிதியாண்டில் மொத்த வர்த்தகம் 151.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வர்த்தகப் பற்றாக்குறை சாதனை அளவாக 112.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் பதிவாகி அமெரிக்காவை முந்தி, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராக சீனா உருவெடுத்துள்ளது.
சென்னையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (ICF), 'வந்தே பாரத்' தளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் அதிவேக 'வந்தே பாரத்' சரக்கு EMU (மின்சாரப் பல அலகு ரயில்) முன்மாதிரியை, சோதனை ஓட்டங்களுக்காக வெளியிடவுள்ளது.
வர்த்தகம், தளவாடங்கள், தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் சுமார் ₹12,000 கோடி முதலீட்டில் உருவான மாபெரும் விரைவுச் சாலைத் திட்டமான டெல்லி-டெஹ்ராடூன் பொருளாதார நடைபாதையை பிரதமர் திறந்து வைத்தார்.
உலகம் முழுவதும் தெருக்களில் வசிக்கும் அல்லது வேலை செய்யும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகள் மாநாட்டின் (CRC) கீழ் அவர்களின் உரிமைகளை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12-ஆம் தேதி சர்வதேச தெருவோரக் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Protect, not Punish” என்பதாகும்.