TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 20 , 2026 15 hrs 0 min 41 0
  • உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி நிலைத்தன்மையை வழங்குவதற்காக, 2026-27 ஆம் ஆண்டுப் பருவத்தில் இருந்து ஒரு கட்டமைக்கப்பட்ட வீரர் ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் அமைப்பாக மும்பை கிரிக்கெட் சங்கம் உருவெடுத்துள்ளது.
  • பாலிவுட் நடிகை சயானி குப்தாவுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான ஹார்வர்ட் தெற்காசிய "ஆண்டின் சிறந்த நபர்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கற்றலை மேம்படுத்துவதற்காக அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), VAANI 3.0 (இந்திய மொழிகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ப்பிற்கான வீரியமிக்கப் பரிந்துரைப்பு) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • 1925 ஆம் ஆண்டு பாரிஸில் சர்வதேச பயில்நிலை வானொலி சங்கம் உருவாக்கப் பட்டதைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று உலகளவில் சர்வதேச பயில்நிலை வானொலி தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்