TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 22 , 2026 7 days 78 0
  • இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 2026 ஆம் ஆண்டு இலங்கைக்குத் தனது முதல் இருதரப்புப் பயணத்தை மேற் கொண்டதோடு இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் (இந்தியா ஆதரவளிக்கும் வீட்டு வசதித் திட்டம்) கீழ் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைத்தார்.
  • IIT மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் தாவர செல் நொதித்தல் தொடர்பான இந்தியாவின் முதல் சிறப்பு மையத்தை அமைக்க ஹெர்பலைஃப் இந்தியா மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) ஆகியவை இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • அமெரிக்காவின் கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்திலிருந்து ஏவப்பட்ட, மறுபயன்பாடு செய்யப்பட்ட நியூ கிளென் முதல் நிலை உந்துவிசையின் முதல் தரையிறக்கத்தை ப்ளூ ஆரிஜின் நிறுவனம் வெற்றிகரமாக நிகழ்த்தியது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக என்று ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று சர்வதேச அன்னை பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • நிலையான வளர்ச்சியில் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளின் பங்கை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று உலகப் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Harnessing Creativity for Global Progress" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்