TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 25 , 2026 11 hrs 0 min 41 0
  • கோன்யாக் பழங்குடியினர் சமீபத்தில் ஏப்ரல் 1 முதல் 6 ஆம் தேதி வரை கோஹிமாவில் புத்தாண்டு, வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கின்ற ஓலியாங் பண்டிகையைக் கொண்டாடினர்.
  • பசுமை இந்தியா சவால் மூலம் காடு வளர்ப்பு மற்றும் பருவநிலை நடவடிக்கைகளில் ஆற்றிய பணிகளுக்காக, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகளாவிய பருவநிலை தலைவர்கள் மாநாட்டில் முன்னாள் எம்.பி ஜே. சந்தோஷ் குமார் "குளோபல் கிரீன் ஐகான்/உலகளாவிய பசுமை சின்னம்" என கௌரவிக்கப்பட்டார்.
  • கொல்கத்தாவைச் சேர்ந்த சதுரங்க வீரர் அரோன்யக் கோஷ், 2026 பாங்காக் சதுரங்க கிளப் ஓபனில் தனது இறுதித் தகுதியை எட்டிய பிறகு, இந்தியாவின் 95வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
  • மத்தியப் புலனாய்வுத் துறையானது (CBI) அத்துறையின் அறிவிப்புகள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை குடிமக்கள் சரிபார்க்கவும், இணையவழி மோசடிகளைத் தவிர்க்கவும் உதவும் ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியான 'அபய்' என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை அறிமுகப்படுத்தியது.  
  • வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் கலாச்சார அமைச்சகமானது "VM ஃபிரேம்ஸ்" என்ற தேசியத் திரைப்பட உருவாக்கப் போட்டியைத் தொடங்கியுள்ளது.
    • இது ரீல்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் தேசபக்தி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெங்குயின்களைக் கொண்டாடுவதற்கும் அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று உலக பெங்குயின் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்