TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 26 , 2026 5 days 61 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷேகா ஏரி பறவைகள் சரணாலயம் இந்தியாவின் 99-வது ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது
    • அலிகாரில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்து உள்ள ஒரு நன்னீர் ஈரநிலமான இது மேல் கங்கை கால்வாய் கட்டப்பட்ட பிறகு 1852-ஆம் ஆண்டில் உருவானது.
  • 4-வது இந்தியா-இலங்கை டைவிங் பயிற்சில் (DIVEX 2026) கலந்து கொள்வதற்காக ஐஎன்எஸ் நிரீக்சக் கப்பல் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • மத்திய ஆசியாவிலேயே முதன்முறையாக, சர்வதேச பாராலிம்பிக் குழுவால் ஏற்பாடு செய்யப்படும் 13-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2027, ஜூன் மாதம் தாஷ்கண்டில் நடைபெறவுள்ளது.
  • பெடெக்ஸ் (FedEx) மற்றும் மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) ஆகியவை இணைந்து இந்தியாவின் முதல் நகரத்திற்கு உள்ளேயான ஆளில்லா விமானத்தின் மூலம் விநியோகச் சோதனைகளை பெங்களூருவில் நடத்தின.
  • உலகளவில் கண்டுபிடிப்புகளைப் பாதுகாப்பதிலும், படைப்பாற்றலை ஊக்குவிப்பதிலும் அறிவுசார் சொத்துரிமையின் பங்கை எடுத்துரைக்கும் வகையில், உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26-ஆம் தேதி உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தை கொண்டாடுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "IP and Sports: Ready, Set, Innovate" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்