TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 30 , 2026 15 hrs 0 min 7 0
  • தலைமைப் பதிவாளர் அலுவலகம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகமானது, 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 1855 என்ற உதவி எண்ணை ஆனது நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
  • இந்தியாவின் கைவினை மரபுகளை மேம்படுத்தவும், நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கவும் இந்திய மத்திய குடிசைத் தொழில் கழகம் தனது முதல் பாரம்பரிய ஆடை வடிவமைப்பான “சோல் த்ரெட்ஸ்” (Soul Threads) என்பதை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) ஆதரவுடன் செயல்படும் அரசாங்க ஆதரவு பெற்ற 'பாரத் டாக்ஸி' செயலியானது, கார்கள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு கமிஷன் இல்லாத, நியாயமான கட்டணத்திலான சேவைகளை வழங்குகிறது.
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது, SMILE (விளிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவு ஆதரவு) திட்டத்தின் கீழ், நிகழ் நேரத் தரவுகள் சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக SMILE – இரவலர் கணக்கெடுப்பு அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடத்திய பிறகு, 2026 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா கோவாவில் நடத்த உள்ளது,.
    • இதற்கு முன்னதாக, 1999 ஆம் ஆண்டு கோவாவில் ஆடவருக்கான SAFF சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
  • அமைதி, ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய முடிவெடுப்பதை மேம்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபையில் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் பங்கை அங்கீகரிக்கும் விதமாக, ஆண்டுதோறும் ஏப்ரல் 25 அன்று சர்வதேசப் பிரதிநிதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • பணியிட விபத்துகளைத் தடுப்பதையும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணி நிலைமைகளை உறுதி செய்வதையும் ஊக்குவிப்பதற்காக, சர்வதேச தொழிலாளர் அமைப்பால் (ILO) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 அன்று பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Good psychosocial working environments: A pathway to thriving workers and strong organizations" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்