TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 5 , 2026 15 hrs 0 min 32 0
  • இந்தியாவின் முதல் கடல் விமான நிறுவனமான ஸ்கைஹாப் ஏவியேஷனுக்கு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உரிமம் வழங்கியுள்ளது; இது லட்சத் தீவுகளில் சேவைகளைத் தொடங்கி, தீவுகளை நிலப்பரப்புடன் இணைக்கும் நோக்கில் செயல்படும்.
  • கார்பன் நடுநிலைமையை அடைவதை நோக்கமாகக் கொண்டு, 2030 ஆம் ஆண்டுக்குள் நிலக்கரியையும், 2045 ஆம் ஆண்டுக்குள் எண்ணெயையும், 2050 ஆம் ஆண்டுக்குள் எரிவாயுவையும் படிப்படியாகக் குறைக்கும் திட்டங்களுடன், 2050 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரைபடத்தை பிரான்ஸ் அறிவித்துள்ளது.
  • பாசுமதி சாகுபடியுடன் இயற்கை வேளாண் முறைகளை இணைத்து நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்காக, பிலிபித்தில் உள்ள தண்டா பிஜைசி கிராமத்தில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பாசுமதி மற்றும் இயற்கை மாதிரிப் பண்ணையை அமைப்பதற்காக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) 70 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • எரிசக்தி சுதந்திரத்தை மேம்படுத்தவும், மின்சார வாகன மின்கல உற்பத்தியை ஆதரிக்கவும், சுரங்கம் முதல் சுத்திகரிப்பு வரை உள்ளடக்கிய ஐரோப்பாவின் முதல் முழுமையான ஒருங்கிணைந்த லித்தியம் திட்டத்தை பின்லாந்து கொக்கோலா அருகே தொடங்கியுள்ளது.
  • இந்தியா மற்றும் இலங்கை இடையேயான IN-SLN DIVEX 2026 கடற்படை பயிற்சியின் 4வது பதிப்பு கொழும்பில் நடைபெற்றது.
  • 1,500 கிமீ-க்கும் அதிகமான தாக்குதல் வரம்பும், மாக் 10 வரையிலான வேகமும் கொண்ட, DRDO நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட நீண்ட தூர அதி மீயோலி கப்பல் எதிர்ப்பு எறிகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
    • ரேடாரிலிருந்து தப்பிக்கும் வகையில் அதிவேகம் மற்றும் சூழ்ச்சித்திறனுக்காக இந்த எறிகணை அதி மீயோலி வேகச் சறுக்கு வாகனத்தை பயன்படுத்துகிறது.
  • போர்த்துகீசிய மொழியின் மொழி பன்முகத்தன்மை மற்றும் லுசோஃபோன் (போர்த்துகீசிய மொழி பேசும்) கலாச்சாரங்களை மேம்படுத்துவதற்காக வேண்டி ஆண்டுதோறும் மே 5 அன்று உலக போர்த்துகீசிய மொழி தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்