ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய கண்டங்களுக்கு இடையிலான எறிகணையை (ICBM) இந்தியா முதன் முறையாகச் சோதனை செய்தது.
கண்டங்களுக்கு இடையிலான எறிகணை (ICBM) என்பது சாதாரண அல்லது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட 5,500 கி.மீ-க்கும் அதிக தூரம் சென்று இலக்கைத் தாக்கக் கூடிய ஒரு நீண்ட தூர எறிகணையாகும்.
2026 ஆம் ஆண்டிற்கான உலக இடப்பெயர்வுப் பறவைகள் தினமானது (WMBD), பறவைகள் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மே 9 மற்றும் அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Every Bird Counts – Your Observations Matter!” என்பதாகும்.