DRDO அமைப்பானது ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் விமான ஒருங்கிணைப்பு மற்றும் விமான சோதனை வளாகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.
ஹண்டாவைரஸ் கண்காணிப்பிற்காக 165 ஆய்வகங்களுடன் கூடிய நாடு தழுவிய வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வக வலையமைப்பை இந்தியா செயல் படுத்தியுள்ளது.
இந்தக் கண்காணிப்பு அமைப்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR), தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
மனநலம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 11 முதல் மே 17 வரை மனநல விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Action" என்பதாகும்.
உலகம் முழுவதும் உள்ள குடும்பங்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று சர்வதேச குடும்பங்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Families, Inequalities and Child Wellbeing" என்பதாகும்.