TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 18 , 2026 14 days 86 0
  • இந்திய அறிவியலாளர் குல்ஜீத் கவுர் மர்ஹாஸ், விண்கல் மற்றும் கிரக அறிவியல் துறையில் 2026 ஆம் ஆண்டிற்கான 'தி மீட்டியோரிட்டிக்கல் சொசைட்டி'-யின் ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.
  • ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) திட்ட வசதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
    • DRDO-இன் கீழ் உள்ள விமானவியல் மேம்பாட்டு முகமையால் உருவாக்கப்படும் இந்த வசதி, இந்தியாவின் உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை ரேடாருக்குப் புலப்படாத போர் விமானத்தின் மேம்பாடு மற்றும் விமான சோதனைக்கு ஆதரவளிக்கும்.
  • ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடியில் தனது முதலாவது குறைக்கடத்தி ஒருங்கிணைப்பு, சோதனை, குறியிடுதல் மற்றும் பொதியிடல் / பேக்கேஜிங் (ATMP) / வெளிப்புறம் சார்ந்த குறைக்கடத்தி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை (OSAT) மையத்தைத் தொடங்கிவைத்தது.
    • சில்லு உற்பத்தி மற்றும் மின்னணுத் தொழில்களை ஊக்குவிப்பதற்காக ராஜஸ்தான் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தனது குறைக்கடத்திக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் இணைப்பு பேருந்து சேவை புது தில்லியின் சென்ட்ரல் விஸ்டா பகுதியில் தொடங்கியது.
    • ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலப் பேருந்துகளானது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன, மேலும் குழாயின் வழியே உமிழ்வாக நீராவியை மட்டுமே வெளியிடுகின்றன.
  • வாகன மாசுபாட்டைக் குறைக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும் மகாராஷ்டிராவின் புனே நகரம் இந்தியாவின் முதல் குறைந்த உமிழ்வு மண்டலத்தை (LEZ) நிறுவும்.
  • அழிந்து வரும் வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டு மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையான மே 15 அன்று தேசிய அழிந்து வரும் உயிரினங்கள் தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Celebrating America’s Wildlife Comeback Stories. Championing the Endangered Species Act.” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்