அகமதாபாத்-தோலேரா இடையே ₹20,667 கோடி மதிப்பீட்டிலான பகுதி அதிவேக ரயில் திட்டத்திற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள சர்க்கேஜ் பகுதியையும் குஜராத்தில் உள்ள தோலேராவையும் இணைக்கும் இந்த இரட்டைப் பாதை இரயில் வழித்தடமானது, உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்திய இரயில்வேயின் முதல் பகுதி அதிவேக இரயில் திட்டமாகும்.
நேபாளத்தைச் சேர்ந்த காமி ரிடா ஷெர்பா 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ள நிலையில் இதன் மூலம், 1994-ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற தனது சொந்த சாதனையை அவர் மேலும் நீட்டித்துள்ளார்.
லக்பா ஷெர்பா தனது 11-வது எவரெஸ்ட் பயணத்தின் மூலம் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளதுடன் இவர் 2000 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி, பின் இறங்கிய முதல் நேபாள பெண்மணி ஆவார்.
'ஃப்ளையிங் வெட்ஜ் டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் தன்னாட்சி போர் விமானமான "கால் பைரவா", முதன்முறையாக ஐரோப்பாவில் தயாரிக்கப்பட உள்ளது.
அறிவியல் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஒளி மற்றும் ஒளி சார்ந்த தொழில் நுட்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று சர்வதேச ஒளி தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Light for a Sustainable Future" என்பதாகும்.
டெங்கு தடுப்பு மற்றும் கொசு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Community Participation for Dengue Control: Check, Clean and Cover" என்பதாகும்.