TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 24 , 2026 16 hrs 0 min 23 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் அருகே உள்ள DRDO சோதனை மையத்தில் ஒருங்கிணைந்த தரை கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ULPGM-V3 எறிகணையின் இறுதி மேம்பாட்டுச் சோதனைகளை DRDO வெற்றிகரமாக முடித்தது.
    • ULPGM-V3 (ஆளில்லா விமானம் மூலம் ஏவப்படும் துல்லியமான வழிகாட்டுதல் எறிகணை-பதிப்பு 3) என்பது ஆளில்லா விமானங்களில் இருந்து ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்ட சுமார் 10 கிலோமீட்டர் தாக்குதல் தூரம் கொண்ட எறிகணை ஆகும்.
  • “கிரேட் பிரிட்டிஷ் கோடைக்காலச் சேமிப்புகள்” திட்டத்தின் கீழ், இங்கிலாந்தில் உள்ள 5 முதல் 15 வயதுடைய குழந்தைகள் வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் உள்ளூர் பேருந்துகளில் வரம்பற்ற இலவசப் பயணம் மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
  • ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆளும் குழுவின் 68-வது கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
    • ஆசியா-பசிபிக் உறுப்புநாடுகளின் பொருளாதாரங்களில் உற்பத்தித்திறன், புதுமை, நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது.
  • சிறந்த பணியிடங்களை உருவாக்குவதிலும், உலகெங்கிலும் உள்ள ஊழியர்களை ஆதரிப்பதிலும் மனிதவள (HR) நிபுணர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று சர்வதேச மனிதவள தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Empower People to Lead Change" என்பதாகும்.
  • உலகளாவிய கடல்சார் துறையில் பெண்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று சர்வதேச கடல்சார் பெண்களுக்கான தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "From Policy to Practice: Advancing Gender Equality for Maritime Excellence" என்பதாகும்.
  • கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கல்வியைப் பாதுகாப்பதில் அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று சர்வதேச அருங்காட்சியக தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Museums Uniting a Divided World" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்