தைவானிய நாவலாசிரியர், கட்டுரையாளர் மற்றும் கலாச்சார விமர்சகரான யாங் ஷுவாங்-ஸி எழுதிய 'தைவான் டிராவலாக்' எனும் நூலானது லின் கிங் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நிலையில், இந்நூல் 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றது.
2026 ஆம் ஆண்டில், பரிசோதனை சோதனை விமானிகள் சங்கத்தின் (SETP) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய சோதனை விமானி என்ற பெருமையை Gp Capt கே.கே. வேணுகோபால் பெற்றார்.
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் இந்தியக் கடற்படைக்கான அடுத்த தலைமுறை கடல் ரோந்துக் கப்பலான (NGOPV) யார்டு 3039 'INS சங்கமித்ரா'வை, கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
மூத்த குடிமக்களுக்காக ஜீவன் (JEEVAN - முதியோர் மேம்பாடு மற்றும் மெய்நிகர் உதவிக்கான கூட்டு வலையமைப்பு) என்ற அலைபேசி செயலியை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதியோர்களின் பாதுகாப்பு, சுகாதார வசதிகளைப் பெறுதல், நல்வாழ்வு, கண்ணியம் மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்தச் செயலி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்புச் சேவைகளை வலுப்படுத்துவதற்காக, புது தில்லியில் நடைபெற்ற "சிறப்பாகச் செயல்படும் பராமரிப்புப் பொருளாதாரத்தை உருவாக்குதல்" என்ற தேசியப் பயிலரங்கின் போது, SHATAYU (உங்கள் பயன்பாட்டிற்கான முதியோர் முழுமைசார் பராமரிப்பு உதவி மற்றும் பயிற்சி) எனும் முதியோர் பராமரிப்பாளர் தகவல் பலகை அறிமுகப் படுத்தப் பட்டது.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் முதியோர் பராமரிப்பாளர்களின் இருப்பைக் கண்டறிய இந்த தகவல் பலகை மூத்த குடிமக்களுக்கு உதவுகிறது.
அன்றாட வாழ்வில் அளவீட்டு அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 20 ஆம் தேதி உலக அளவீட்டு தினம் அனுசரிக்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Metrology: Building Trust in Policy Making" என்பதாகும்.