TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 31 , 2026 4 days 56 0
  • புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவின் முதல் ஓட்டுநரற்ற விமான நிலைய ஏர் ரயிலை அமைக்க டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
  • அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL), குஜராத்தின் காவ்டாவில் 3.37 ஜிகாவாட்-மணிநேர (GWh) மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பை (BESS) அமைத்துள்ளதுடன் இது சீனாவிற்கு வெளியே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஒற்றை-இட மின்கலச் சேமிப்பு அமைப்பாகும்.
  • ரஷ்யாவும் கஜகஸ்தானும், கஜகஸ்தானின் முதலாவது அணுமின் நிலையத்தைக் கட்டுவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன; தென்கிழக்கு கஜகஸ்தானில் உள்ள பால்காஷ் ஏரிக்கு அருகிலுள்ள உல்கென் கிராமத்தில், ரோசாட்டம் நிறுவனத்தால் இந்த அணுமின் நிலையம் உருவாக்கப்படவுள்ளது.
  • அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தின் கீழ் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக கர்நாடக கிராம வங்கிக்கு (KGB), ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) விருது வழங்கப்பட்டுள்ளது.
    • இவ்வங்கி 1,75,500 கணக்குகள் என்ற இலக்கை முறியடித்து 2,49,185 APY பதிவுகளைச் செய்து, 142% சாதனையைப் பதிவு செய்துள்ளது.
  • சந்தீப் ராய் ரத்தோர் அவர்களைத் தொடர்ந்து, தமிழக காவல்துறை தலைமை இயக்குநராகவும் (DGP) காவல்துறை தலைவராகவும் (HoPF) மகேஷ் குமார் அகர்வால் அவர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
  • பெண்களின் சுகாதார உரிமைகள் மற்றும் தரமான மருத்துவச் சேவைகளை அவர்கள் பெறுவதை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று சர்வதேச பெண்கள் ஆரோக்கியத்திற்கான நடவடிக்கை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் மாதவிடாய் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துவதற்காக மே 28 அன்று மாதவிடாய் சுகாதார தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்