TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 10 , 2026 4 days 74 0
  • பில்ட் 2026 நிகழ்வில் மைக்ரோசாப்ட் நிறுவனமானது மஜோரானா 2 எனும் குவாண்டம் சில்லு/சிப்பை வெளியிட்டது; இதில் குபிட் (qubit) நிலைத்தன்மையில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் சராசரி ஆயுட்காலம் 20 விநாடிகளாகவும், அதிகபட்சமாக 60 விநாடிகள் வரை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் வனவிலங்கு கணக்கெடுப்பின் போது, ஒரு அரிய வகை காட்டுப் பூனை (caracal) பதிவாகியுள்ளது.
    • இந்தியாவின் மிக அரிய வகை காட்டுப் பூனை இனங்களில் ஒன்றான இது புல்வெளிகள், குறுங்காடுகள் மற்றும் வறண்ட வாழ்விடங்களுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளக்கூடியது.
  • முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) வினோத் ராய் எழுதிய "When Audit Matters: CAG Interventions That Made a Difference" என்ற புத்தகத்தை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார்.
  • குஜராத்தில் உள்ள கல்பசார் திட்டத்தில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான விருப்பக் கடிதத்தில் இந்தியாவும் நெதர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
    • கல்பசார் திட்டம் என்பது காம்பே வளைகுடாவின் குறுக்கே அணை கட்டுவதற்கான குஜராத் மாநில அரசின் பல்நோக்குத் திட்டமாகும்.
  • பாதுகாப்பான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்கும், உணவு சார்ந்த நோய்களைத் தடுப்பதற்கும் ஆண்டுதோறும் ஜூன் 7 அன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு “From Burden to Solutions – Safe Food Everywhere” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்