ஆண்டின் வளர்ந்து வரும் சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து புத்தொழில் பிரிவில் GRASA நிறுவனமானது 2026 ஆம் ஆண்டிற்கான ராஷ்டிரிய ரத்னா சம்மன் விருதைப் பெற்றது.
சிறுதானியங்கள், நொதித்தல் மற்றும் குடல் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் உணவு சார்ந்த வளர்சிதை மாற்ற மீட்பு அமைப்பாக GRASA விவரிக்கப்படுகிறது.
ஜப்பானின் ககாமிகஹாராவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஆடவர் U18 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மாம்பழச் சாகுபடி மற்றும் அதன் வகைகளை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை ராயப்பேட்டையில் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மாம்பழத் திருவிழாவை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிகழ்நேர வேளாண் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக, இந்தியாவின் முதல் வாட்ஸ்அப்/புலனம் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு ஆலோசனை சேவையான 'எண்ணெய் வித்துக்கள் கிசான் மித்ரா'-வை ICAR அறிமுகப்படுத்தியுள்ளது.
மெட்ராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கழகமானது (IIT-M), உலகின் மிக விரிவான முப்பரிமாண மனித மூளைத்தண்டு வரைபடமான ANCHOR-ஐ (முப்பரிமாண புனரமைப்புடன் கூடிய மனித மூளைத்தண்டின் நரம்பியல் வேதியியல் பண்புகளின் வரைபடத் தொகுப்பு) வெளியிட்டுள்ளது.
இது சுவாசம், இதயத்துடிப்பு மற்றும் தூக்கம் போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பகுதியான மனித மூளைத்தண்டின் மிக விரிவான முப்பரிமாண வரைபடத்தை வழங்குகிறது.
SpaceX நிறுவனம் நாஸ்டாக் பங்குச்சந்தையில் நுழைந்ததன் மூலம் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு சுமார் $1.05 டிரில்லியனாக உயர்ந்து, உலகின் முதல் டிரில்லியனர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அவதார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டுக் காணொளி செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியான 'வர்யா'-வின் தொடக்கத்திற்கு IndiaAI திட்டம் ஆதரவளித்துள்ளது.
'வர்யா' என்பது மேம்பட்ட காணொளி நுண்ணறிவை மலிவானதாகவும், அணுகக் கூடியதாகவும் மற்றும் இந்தியாவிற்குப் பொருத்தமானதாகவும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சுருக்கப்பட்ட காணொளி மாதிரியாகும்.