TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 21 , 2026 16 hrs 0 min 42 0
  • வங்காள தேசமானது ராஜ்பாரி மாவட்டத்தில் பத்மா ஆற்றின் குறுக்கே பத்மா அணைக்கட்டு திட்ட கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • பத்மா ஆறு என்பது கங்கை நதியின் வங்காள தேசப் பகுதியாகும் என்ற நிலையில் இத்திட்டம் நாட்டின் தென்மேற்கு வறட்சிப் பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக் குறையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தொலைதூர மலைப் பகுதிகளில் விரைவான அஞ்சல் தொடர்பை வழங்குவதற்காக, இந்தியாவின் முதல் ஆளில்லா விமான அடிப்படையிலான அஞ்சல் மற்றும் பொட்டலம் / பார்சல் பரிமாற்ற சேவையை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தலைமை அஞ்சலகம் மற்றும் ரெஹர்தார் கிளை அஞ்சலகம் இடையே அஞ்சல் துறை தொடங்கி ள்ளது. 
  • ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் உள்ள லாம் பண்ணையின் மண்டல தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமானது (RHRS) LCA-625 மற்றும் LCA-643 என்ற இரண்டு புதிய மிளகாய் ரகங்களை வெளியிட்டுள்ளது.
  • இந்தியக் கடற்படையின் INAS 330 ("தி ஹார்பூன்ஸ்/ஈட்டிகள்") 55 ஆண்டுகால சேவைக்குப் பிறகு பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது, இதன் மூலம் Sea King Mk 42B ஹெலிகாப்டர்கள் ஓய்வு பெறுகின்றன; இதற்கு மாற்றாக MH-60R Seahawks ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
  • வெறுப்புப் பேச்சின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் அதனைத் தடுக்கவும் மற்றும் எதிர்கொள்ளவும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, சர்வதேச வெறுப்புப் பேச்சை எதிர்கொள்வதற்கான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு The Power of Partnerships in Countering Hate Speech என்பதாகும்.
  • திறந்தவெளி உணவு, இயற்கை மற்றும் சமூக ஒன்று கூடல்களைக் கொண்டாடும் வகையில், சர்வதேச சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18 அன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்