TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 22 , 2026 16 days 156 0
  • தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் 548 கி.மீ வழித்தடங்களில் ரூ.300 கோடிக்கும் அதிகமான செலவில் Kavach 4.0 (தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு) என்ற தகவல் தொடர்பு மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்காக 1,200 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
    • அபாய கட்டத்தில் ரயில் சமிக்ஞைகளைக் கடப்பது (SPAD), நேருக்கு நேர் மோதல்கள், பின்புற மோதல்கள் மற்றும் ரயில்களின் அதிக வேகம் ஆகியவற்றை கவாச் தடுக்கிறது.
  • பெங்களூரைச் சேர்ந்த Sarvam AI நிறுவனமானது, Series B நிதிச் சுற்றில் $234 மில்லியன் நிதியைத் திரட்டிய பிறகு, இந்தியாவின் 130-வது யூனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டில் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், கிராமப்புறப் பொருளாதாரத்தை ஆதரிக்கவும் அசாம் மாநிலத்தின் நான்கு பாரம்பரியத் தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது.
    • புவிசார் குறியீடு பெற்ற கார்பி ஆங்லாங் கைத்தறி தயாரிப்புகள், அசாம் பிஹு பெபா, அசாம் மூங்கில் கைவினைப்பொருட்கள் மற்றும் தேவ்ரி கைத்தறி தயாரிப்புகள் ஆகியன அந்த நான்கு தயாரிப்புகள் ஆகும்.
  • அணுக்கருப் பொறியியலில் இந்தியாவின் முதல் வடிவமைப்பு சிறப்பு மையத்தை (CODENE) ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) அமைக்க உள்ளது.
    • இது 2047 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் (GW) அணுமின் சக்தி என்ற தேசிய இலக்கை ஆதரிக்கும் வகையில், இந்தியாவின் அணுசக்தித் துறைக்கான மேம்பட்ட பொறியியல் திறமைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்த (PCT) அமைப்பின் கீழ் உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) உலகளாவிய சிறந்த 20 காப்புரிமை தரவரிசையில் 'ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்' நுழைந்துள்ளதுடன், இந்தப் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இதுவாகும்.
    • உலகளாவிய காப்புரிமைத் தாக்கல்கள் கடுமையாக அதிகரித்ததன் காரணமாக, இந்நிறுவனம் சுமார் 320 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளது.
  • நீரியல் வரைவியல் மற்றும் பாதுகாப்பான வழிசெலுத்தல் மற்றும் கடல் பற்றிய அறிவில் அதன் பங்கு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலக நீரியல் வரைவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Transforming how ocean data is shared என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்