TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 28 , 2026 10 days 114 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான அம்புபாச்சி மேளா அசாமில் உள்ள காமாக்யா கோவிலில் நடைபெறுவதுடன் இது மா காமாக்யாவின் ஆன்மீக ஓய்வு மற்றும் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு சூரியன் மாறுவது போன்ற ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பருவமழைக் கால திருவிழா ஆகும்.
  • வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை நறுமணப் பொருட்கள் பதப்படுத்தும் ஆலையானது மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தில் உள்ள போயிரிம்போங்கில் திறக்கப்பட்டது.
  • தமிழ்நாடு காவல் துறையின் இரண்டாம் நிலை காவலர் ஜே.கௌதமி, ஜப்பானின் நகோயாவில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க தகுதி பெற்று உள்ளார்.
    • ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற 65-வது தேசிய மாநிலங்களுக்கு இடையேயான மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இவர் தங்கப் பதக்கம் வென்றார்.
  • மேகாலயா மாநில உயிரியல் பூங்காவில் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் குட்டை வால் குரங்கு (மகாக்கா ஆர்க்டாய்டீஸ்) முதல்முறையாக வெற்றிகரமாக ஈனப் பட்டு உள்ளது.
    • தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை முதன்மைக் குரங்கு இனமான குட்டை வால் குரங்கானது IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாட்டிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 அன்று சர்வதேச MSME தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Empowering MSMEs through Innovation and Sustainable Industrial Development என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்